இந்திய பொருளாதாரத்தின் மீது நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது!: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் மீது நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டதாக  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய பொருளாதாரம் குறித்தும் மத்திய அரசு குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்நிலையில் அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 இதை நாட்டின் பிரதமர் அவரது அமைச்சர் குழுவினர் புரிந்துகொள்ளவில்லை என்றும் பொருளாதார சிக்கலை சரி செய்யும் திறனும் அவர்களுக்கு இல்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு இந்தியரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். மத்திய அரசின் மோசமான பொருளாதார மேலாண்மை, லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: