உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் அடுத்தாண்டு முடியும்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்பு, அதன் சமூக பொருளாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பிராந்திய வளர்ச்சிக்காகவும் பிரதமரின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 80,068 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் காஷ்மீரை நாட்டின் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், செனாப் நதியின் மீது 359 மீட்டர் (1,185 அடி) உயரத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இது கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் இதுவே உலகின் மிக உயரமான ரயில் பாலமாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 266 கிமீ வீசினால் கூட தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. உதம்பூர்-காத்ரா இடையிலான 25 கிமீ., பானிகால்-காசிகுந்த் இடையிலான 18 கிமீ., காசிகுந்த்-பாரமுல்லா இடையிலான 118 கி.மீ. பகுதியில் பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. காத்ரா-பானிகால் இடையிலான 111 கி.மீ. தூரத்துக்கான பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது 2022ம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: