வீரத்தையும், தியாகத்தையும் கவுரவப்படுத்த தேசிய போர் நினைவிடத்தில் கல்வான் வீரர்களின் பெயர்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘கல்வான் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்படும்,’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கின் மீது உரிமை கோரி, சீனா மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த சச்சரவு கடந்த ஜூன் 15ம் தேதி இருதரப்பு மோதலாக மாறியது. சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலியான சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஜிங்பிங் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும், 35 சீன வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது. இந்நிலையில், கல்வானில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கவுரவிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அவர்களின் பெயர்களை பொறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று அது பிறப்பித்தது.

Related Stories: