புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கொரோனா எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,83,156-லிருந்து 15,31,669 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,513 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,425-லிருந்து 34,193-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,743-லிருந்து 9,88,029-ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,09,447 உள்ளதாக இன்று காலை அறிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தியதாவது:  புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கொரோனா எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக  உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில்  துப்பும் போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: