ரத்தின கம்பள வரவேற்பு அசாமில் பிளாஸ்மா தானம் கொடுத்தால் அரசு வேலை: வெள்ளம் சூழ்ந்தாலும் அழைத்துச் செல்ல படகு வரும்

கொரோனாவுக்கு எத்தனை மருந்துகள் வந்தாலும், பிளாஸ்மா சிகிச்சை நூறு சதவீத பலன் தரும் என மருத்துவ உலகம் முழுமையாக நம்புகிறது. நாட்டில் 9 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமாகி இருந்தாலும், பிளாஸ்மா தானம் வழங்குவது குறைவாகவே இருக்கிறது. அதனால்,  நாடு முழுக்க பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்காத அரசுகளே இல்லை. அசாமும் இதற்கு விதிவிலக்கல்ல…. ஆனால், ஒரு படி மேலே போய், சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு, 33,000க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதித்துள்ளனர். 80 பேர் இறந்துள்னர். இது ஒருபுறம் இருக்க, வெள்ளத்தால் 30 லட்சம் பேர் பாதித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். இதனால், செப்டம்பரில் கொரோனோவின் கோரத்தாண்டவம் இங்கு உச்சத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.   

அதற்கு முன்பாகவே, இதை  கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அசாம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், பிளாஸ்மா தானம் பெறுவதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறுகையில், ‘‘கொரோனா மருந்து போதுமான அளவுக்கு சப்ளை இல்லை. நூறு பாட்டில் மருந்து தேவை. ஆனால், கிடைத்தது 12 முதல் 16தான். சில நாட்களுக்கு முன்புதான் உள்ளூர் நிறுவனம் மூலம் 400 பாட்டில் கிடைத்தது. எனவேதான், பிளாஸ்மா தானத்தை பெரிதாக நம்பியுள்ளோம்,’’ என்றார்.

 அதனால்தான், பிளாஸ்மா தானம் செய்பவர்களை, வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் படகை அனு்ப்பி அழைத்து வருகிறது அசாம் அரசு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர், 4 வாரம் கழித்து தானம் செய்யலாம். அவரால் 2 பேருக்கு சிகிச்சை கிடைக்கும். எனவே, கொரோனா தானம் செய்தால் உங்களுக்கு அரசு வேலை மற்றும் வீடு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை தரப்படும் என அசாம் அரசு ராஜ மரியாதை தருகிறது. அட, இது நல்ல ஆஃபரா இருக்கே என பெட்டியும் கையுமா அசாமுக்கு கிளம்ப ரெடி ஆயிட்டீங்களா…!

Related Stories: