விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளார் கூட்டுறவுத்துறை பதிவாளர்

சென்னை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறை பதிவாளர் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியில் மிரர் கணக்கு தொடங்கினால் தான் பயிர்க்கடன் என்பதில் மாற்றம் இல்லை.

மத்திய வங்கியில் கணக்கு இருந்தால்தான் பயிர்க்கடனுக்கு 2% வட்டி மானியம், 3% வட்டி ஊக்கத்தொகை வழங்கப்படும். கிசான்கடன் அட்டையை பயன்படுத்தியே பணம் பெற முடியும் என்பதால் மத்திய வங்கியில் கணக்கு அவசியம்.

கடன் மனுக்களை தொடங்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலேயே பரிசீலிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு சங்க அளவில் பரிசீலித்து கிசான் கடன் அட்டை மூலமாகவே கடன்தொகை வழங்கப்படும்.

விவசாயிகள் தமக்கு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் கிசான் அட்டை மூலம் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஏ.டி.எம் இல்லாத இடங்களில் பி.ஓ.எஸ் கருவி, மைக்ரோ ஏ.டி.எம் மூலம் தொடக்க சங்கத்திலேயே பணம் வழங்கலாம். மத்திய கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தில் கையெழுத்தை பெற்று சங்கமே பணத்தை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: