முதல்முறையாக ஒரே நாளில் 49,931 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 லட்சத்தை தாண்டியது; 4.85 லட்சம் பேர் சிகிச்சை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,453-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 49,931 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 32,771 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 708  உயிரிழந்துள்ளனர். இதுவரை 9,17,568 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,991 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,85,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,75,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,656 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,13,238 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,48,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,494 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,30,606 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,827 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,14,875 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 11,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 32,228 பேருக்கு பாதிப்பு; 79 பேர் பலி; 24,040 பேர் குணமடைந்தது.

பீகாரில் 39,176 பேருக்கு பாதிப்பு; 244 பேர் பலி; 25,815 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 887 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 572 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 7450 பேருக்கு பாதிப்பு; 43 பேர் பலி; 4944 பேர் குணமடைந்தது.

கோவாவில் 4861 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 3277 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 55,822 பேருக்கு பாதிப்பு; 2,326 பேர் பலி; 40,365 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 31,332 பேருக்கு பாதிப்பு; 392 பேர் பலி; 24,384 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 3900 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 2361 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 19,025 பேருக்கு பாதிப்பு; 61 பேர் பலி; 9300 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 35,909 பேருக்கு பாதிப்பு; 621 பேர் பலி; 25,353 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 8275 பேருக்கு பாதிப்பு; 85 பேர் பலி; 3704 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1285 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 1063 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2235 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1554 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 702 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 135 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 361 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 193 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 1339 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 549 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 25,389 பேருக்கு பாதிப்பு; 140 பேர் பலி; 16,793 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 2786 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1645 பேர் குணமடைந்தது.

பஞ்சாப்பில் 13,218 பேருக்கு பாதிப்பு; 306 பேர் பலி; 8810 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 6104 பேருக்கு பாதிப்பு; 63 பேர் பலி; 3566 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 96,141 பேருக்கு பாதிப்பு; 1878 பேர் பலி; 35,838 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 17,920 பேருக்கு பாதிப்பு; 312 பேர் பலி; 9,928 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 54,059 பேருக்கு பாதிப்பு; 463 பேர் பலி; 41,332 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 58,718 பேருக்கு பாதிப்பு; 1372 பேர் பலி; 37,751 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 66,988 பேருக்கு பாதிப்பு; 1426 பேர் பலி; 41,641 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 96,298 பேருக்கு பாதிப்பு; 1041 பேர் பலி; 46,301 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1158 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 505 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 27,800 பேருக்கு பாதிப்பு; 811 பேர் பலி; 19,132 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 2176 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1198 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 324 பேருக்கு பாதிப்பு; 182 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 914 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 550 பேர் குணமடைந்துள்ளார்.

சிக்கிமில் 545 பேருக்கு பாதிப்பு; 148 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories: