மராட்டியத்தில் தமிழ் தலைமையிலான அரசை கவிழ்க்க முடியுமா!: பாரதிய ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

புனே: மராட்டியத்தில் தமிழ் தலைமையிலான அரசை கவிழ்க்க முடியுமா என்று பாரதிய ஜனதாவுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் அந்தக் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்தார். அப்போது அவர் விடுத்துள்ள செய்தியில், ஆகஸ்ட் மாதத்திற்குள் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பாரதிய ஜனதா ஏற்கனவே கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். மராட்டியத்தில் ஆளும் மெகா மூன்று கட்சி கூட்டணி ஏழை, எளிய மக்களுக்கு பாடுபடும் அரசு என்று உத்தவ் தாக்கரே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் மராட்டியத்தில் தமிழ் தலைமையிலான அரசை முடிந்தால் கவிழ்க்குமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் தாம் கலந்துகொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூமி பூஜையில் பொதுமக்கள் கலந்துகொள்ள இயலாத நிலை உள்ளதால் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மும்பை தாராவியில் குடிசை பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு உலகளவில் பாராட்டு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: