கொரோனாவால் படுமோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி அளிக்க ஐ.நா திட்டம்

நியூயார்க்: உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஐநா சபை கொரோனாவால் படுமோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல நாடுகளில் அடிமட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ ஐநா மேல்மட்டக் குழு முடிவெடுத்துள்ளது.

தற்போது 2.7 பில்லியன் மக்கள் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 30 வளர்ச்சியடையாத நாடுகளில் கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் மரணம் அடைய வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. மாதத்துக்கு 199 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை பின்தங்கிய நாடுகளில் உள்ள அடிமட்ட குடிமக்களுக்கு அளிக்க ஐநா சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்காக யூ.என் டெவலப்மென்ட் ப்ரோக்ராம் எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள், மத்தியத் தரைகடல் நாடுகள், கிழக்காசிய நாடுகள் இந்த பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

Related Stories: