நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும்...! துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முகநூல் கட்டுரையில் சூசகம்!!!

டெல்லி:  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதாக குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது? தொடங்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத்தின் கடைசி அமர்வு நடைபெற்ற 6 மாதங்களுக்குள், அடுத்த கூட்டத்தொடர் நடக்கவேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஆகவே மழைக்கால கூட்டத்தொடரையும், நாடாளுமன்ற கூட்டத்தொடரையும் நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், தாம் பல சுற்று ஆலோசனைகளை நடத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றி கூட்டத்தொடரை நடத்துவது பற்றியும் அவர் விவாதித்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், இருக்கை வசதி, எம்.பி.க்கள் பங்கேற்பு குறித்து நன்கு திட்டமிடவேண்டிருப்பதாகவும் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Related Stories: