கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்: மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் பேட்டி..!!

கொல்கத்தா: கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: பசுவின் மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது, இந்தியர்கள் பசுக்களை வணங்கி வருகின்றோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி புரியும் என்று வினவியுள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. டந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38,902 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,816-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423-ஆக உயர்ந்து 3,73,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: