பாபநாசத்தில் ஏலத்தில் பங்கேற்க வசதியாக பருத்தி பஞ்சுகளை வைக்க போதிய இடமில்லை

பாபநாசம்: பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்பதற்காக பருத்தி பஞ்சுகளை வைக்க போதிய இடமில்லை. இதனால் தற்காலிகமாக புதிய குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் கடந்த வாரம் நடந்தது. இதில் பங்கேற்க பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி திருவாரூர், வலங்கைமான், குத்தாலம், ஆடுதுறை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், பூந்தோட்டம், எரவாஞ்சேரி உள்ளிட்ட வெளியூரை சேர்ந்த விவசாயிகளும் பருத்தி பஞ்சுகளை கொண்டு வந்தனர்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 குடோன் உள்ளது. இந்த 4 குடோன்களில் பருத்தி பஞ்சுகளை வைத்தனர். இதனால் இருப்பினும் இடம் போதவில்லை. இதனால் 60 லோடு ஆட்டோக்களில் கொண்டு வந்த பருத்தி பஞ்சுகளை பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் குடோனுக்கு வெளியே பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இருப்பினும் பல விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவே பருத்தி பஞ்சுகளை வைப்பதற்கு தற்காலிகமாக ஒரு பெரிய குடோனை அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள்

கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: