பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அனுபம் கெர் தனது வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; என்னுடைய அம்மா துல்ஹரிக்கு மிதமான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகிலாபென் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் சகோதரர், என்னுடைய அண்ணி, அவர்களது மகன் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் இருந்தபோதிலும் மிதமான அறிகுறிகளுடன் அவர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்துகொண்டேன், எனக்குக் கொரோனா தொற்று இல்லை என கூறினார்.

Related Stories: