தங்கம் கடத்திய வழக்கில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு? சொப்னா மீது உபா சட்டம் பாய்ந்தது: தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் சொப்னா உட்பட 4 பேர் மீது உபா (சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் தேசிய  புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) வழக்குப்பதிவு செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில்  உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ, ஐபி, ரா அமைப்புகள் நடத்திய முதற்கட்ட விசாரணையிலேயே, கடத்தலில் தீவிரவாதிகளுக்கு பங்கு  இருக்கும் என தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, உயர் அதிகாரிகளுடனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித்தோவலுடனும் ஆலோசனை நடத்தினார். இதில், கடத்தல்  விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க  தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பிரதமரும் அனுமதி அளித்துள்ளார்.

இதையடுத்து  தங்கம் கடத்தல் வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷ் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இது நேற்று நீதிபதி அசோக் மேனன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை என்ஐஏ ஏற்றிருப்பதால் மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞர் ரவி பிரகாஷ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார். அவர் கூறுகையில், ‘‘தங்கம் கடத்தல் சம்பவத்தில் சொப்னா சுரேஷுக்கு முக்கிய பங்கு உண்டு. கள்ளக்கடத்தலில் கிடைக்கும் பணம் தீவிரவாத செயலுக்கு பயன்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ேதசிய புலனாய்வு அமைப்பு சட்டம் 21ம் பிரிவின்படி முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி இல்லை.

சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். தீவிரவாதிகளுக்கும் பங்கு இருக்கலாம் என்பதால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(உபா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் உபா சட்டம் 43 (பி) யின்படி முன் ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது. சொப்னாவை காவலில் விசாரிக்கவேண்டியது மிக அவசியம். இது நாட்டின் பாதுகாப்பையும் ெபாருளாதாரத்தையும் பாதிக்கும் விஷயம் என்பதால் முன் ஜாமீன் வழங்க கூடாது’’ என்றார். இதை பரிசீலித்த நீதிபதி, விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த விவகாரம் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் பதவி விலக கோரி கேரளா முழுவதும் ேபாராட்டம் வெடித்துள்ளது.

பினராய் வரவேற்பு

கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்த விவகாரம் நாட்டின் ெபாருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் இதற்கு முன்பு நடந்த கடத்தல்கள் குறித்தும் யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரிக்கப்போவதாக என்ஐஏ, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்’’ என்றார்.

Related Stories: