கஜானாவில் பணம் இல்லை.. சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை ரத்து செய்தது தமிழக அரசு: ஊழியர்கள் ஷாக்!!

சென்னை : சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 4 மாதங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் மதிப்பூதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தமிழக நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: