பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3,688 கோடி கடன் வாங்கி வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனம் மோசடி : வாராக் கடன் மதிப்பு ரூ.73,500 கோடியால் வங்கிக்கு நெருக்கடி!!

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனம் ஒன்று ரூ.3,688 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது. டிஎச்எப்எல் என்று அழைக்கப்படும் தேவன் வீட்டு கடன் வசதி நிதி நிறுவனம் மும்பைக் கிளையில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் போனதால் ரூ.3,688 கோடியை வாராக்கடன் பட்டியலில் சேர்த்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி முறைப்படி தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி போன்ற பல வங்கிகளில் தேவன் வீட்டுக் கடன் வசதி நிறுவனம் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது.

ஒரு லட்சம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் டிஎச்எப்எல் நிறுவனத்தை திவால் பட்டியலில் சேர்க்க வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற ரூ.11,300 கோடி வங்கிக் கடன் செலுத்தாமல் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, ஏற்கனவே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இது போன்று பல மோசடிகளில் சிக்கியுள்ள பஞ்சாப் நேஷன்ல் வங்கியில் வாராக் கடன் மதிப்பு ரூ. 73,500 கோடியாகும்.

Related Stories: