சிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்

திருச்சி: கொரோனா ஊரடங்கால் சர்வதேச விமான போக்குவரத்து இந்தியாவில் 3 மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானத்தில் 167 பேர் திருச்சி வந்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது, திருவாரூரை சேர்ந்த தியாகராஜன், வெங்கடேசன் ஆகியோர் கடத்தி வந்த ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: