தூத்துக்குடியில் கோவில்பட்டி தினசரி சந்தையில் 13 பேருக்கு கொரோனா தொற்று...! தடுப்பு நடவடிக்கையாக ஒரு வார காலம் சந்தையை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் கொரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தை 7 நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1175ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 847ஆக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி நகராட்சியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இன்று முதல் வரும் 12ம் தேதி வரை சந்தையை மூட நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தினசரி சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், ராமநாதபுரத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் வரும் 12ம் தேதி வரை கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுர நகரில் 100க்கும் மேற்பட்ட நகை கடைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கும்.

Related Stories: