கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது

கூடலூர்:கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரியை அடுத்துள்ள கொழுதன பகுதியைச் சேர்ந்தவர் ஜெம்சீர் அலி (35). இவர் ஜெயலலிதாவின்  கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார். தற்போது, ஜெம்சீர் அலி  நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா  விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வைத்திரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் வைத்திரி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் போலீசார்  சோதனை நடத்தினர். அங்கு கஞ்சாவை பொட்டலமிட்டு கொண்டிருந்த ஜெம்சீர் அலி, மிதிலாஸ் (22), சாகாபு (24) ஆகியோரை போலீசார் கைது  செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: