கேரளாவில் இன்று முதல் பொத்துக்கிட்டு ஊத்தும் வானம்: பருவமழை தீவிரமாகிறது

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் இன்று முதல் மீண்டும் பருவமழை தீவிரமடையும்.’ என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பரவலாக தீவிரமடைந்த மழை, தொடங்கிய வேகத்தில் பின்னர் படிப்படியாக குறைந்தது. வழக்கமாக ஜூன் மாதத்தில் 643 மி.மீ மழை பெய்யும். ஆனால், கடந்த மாதம் 17 சதவீதம் குறைவாக, 536 மி.மீ மழையே பெய்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் மீண்டும் மழை தீவிரமடையும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இன்று காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோரங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: