மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; தமிழகத்தில் கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவுக்கு முதல்வர் தான் காரணம்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ காட்சி மூலம் பேசிய மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று முதல்வர் செயல்படுகிறார்.

கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை. இவரு என்ன சொல்றது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியாக இருக்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை. ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை நான் கூறவில்லை என முதலமைச்சர் சொல்கிறார். என்னுடைய அறிக்கைகள் அனைத்தும் ஆலோசனை கூறும் வகையில் உள்ளன. நான் சொன்ன ஆக்கப்பூர்வமான ஆலோசனையை கேட்கவும் இல்லை, செயல்படுத்தவும் இல்லை. மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் தெரிவித்தேன் என்றார்.

ஊரடங்கில் தளர்வு அறிவித்து, தவறு செய்தது அரசு.மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்று முதலமைச்சர் கூறுகிறார். அதிக மக்கள் நெருக்கம் உள்ள மும்பை தாராவியில் கூட கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவுக்கு முதல்வர் தான் காரணம். அரசு செய்ய தவறியதால் தான் ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் திமுக உதவி செய்தது.

சமூக பரவல் இல்லை என்ற வார்த்தையை விளையாட்டாக பயன்படுத்துகிறார் முதல்வர். மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது யார்? என்றும் மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும் என குரல் கொடுத்தது யார்?, மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தது யார்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: