4 பேருக்கு கொரோனா எடியூரப்பாவின் கிருஷ்ணா இல்லம் மூடல்

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் பணியாற்றி வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கிருஷ்ணா இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா குடியிருக்கும் காவிரி இல்லத்தின் அருகில், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணா உள்ளது. இங்கு பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணாவில் பணியாற்றி வரும் பெண் காவலர், ஆயுதப்படை காவலர், தீ அணைப்பு படை வீரர் மற்றும் எலக்ட்ரீஷியன் ஆகிய 4 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணாவுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில் பெங்களூருவில் லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று கிருஷ்ணாவில் ஆலோசனை கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் கிருஷ்ணாவுக்கு சீல் வைக்கப்பட்டதால் ஆலோசனைக்கூட்டம் விதானசவுதாவுக்கு மாற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணா மூடப்பட்டு இருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: