ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை.:பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி ட்வீட்

பெங்களூரு: வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார். எனவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என சிறைத்துறை திட்டவட்டமாக கூறியது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது சிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: