கொரியாவில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு வணக்கம் எனவும் கூறினார்.

இன்று கொரியப் போர் வெடித்த 70 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் கொரிய தீபகற்பத்தில் 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனையை போரின் போது நிறுத்தியதன்  காரணத்திற்காக இந்தியா பெருமிதம் கொள்கிறது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து தைரியமான இதயங்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: