திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் தவிர மற்ற சில மாநிலங்களில்  உள்ள கோயில்களில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக  அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 8.20 மணி வரை மொத்தம் 9,301 பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்தனர்.  இதில், 2,119 ஆண்கள், 80 பெண் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். கடந்த 21ம் தேதி பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், ரூ.57 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்திருந்தனர்.

Related Stories: