ஆந்திராவிலும் அதிர்ஷ்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: 6.3 லட்சம் மாணவர்களும் பாஸ்

திருமலை: தமிழகத்தை போல் ஆந்திராவி்லும் 10ம் வகுப்பு பொதுத்ேதர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் நேற்று கூறியதாவது: மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு தேர்வை வரும் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதன்படி, ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க இருந்தோம். 11 பாடங்களுக்கு தேர்வு நடத்த இருந்த நிலையில், 6 பாடங்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை முற்றிலும் ரத்து செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

மேலும், இன்டர்மீடியட் முதலாமாண்டு, 2ம் ஆண்டு (பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு)  முடிவுகள் வெளியானது. இதில் தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தற்போது வாய்ப்பு இல்லாததால், அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேல் வகுப்பிற்கு செல்வதற்கு திருப்பு முனையாக அமையும் என்பதால் இதற்கு உண்டான மதிப்பெண் கிரேட் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் விதிமுறைகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  அரசின் இந்த அறிவிப்பால் 10ம் வகுப்பு  தேர்வு எழுத இருந்த 6.3 லட்சம் மாணவர்க்ளும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.  இதேபோல், தமிழகத்திலும் சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: