சீன தாக்குதல் தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

டெல்லி : சீன தாக்குதல் தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தளபதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத் துறை குற்றம் சாட்டிய நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது. லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

Related Stories: