வேலூரில் போலீஸ் குடியிருப்பு எதிரே சாலையில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்

வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலையம் பின்பக்கம் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு எதிரே சாலையோரம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: