கொரோனா பாதிப்பிலிருந்து ஷாகித் அப்ரிடி விரைவில் நலம் பெற வேண்டும்; இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

டேல்லி: கொரோனா பாதிப்பிலிருந்து ஷாகித் அஃப்ரிதி விரைவில் நலம் பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்திருந்தார். அண்மையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அஃப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அஃப்ரிதிக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் களத்திலும் சரி சமூக வலைத்தளத்திலும் சரி காம்பீரும் அஃப்ரிதியும் கடுமையாக வார்த்தை போர்களால் மோதிக்கொள்வார்கள். பிரதமர் மோடி மீது அஃப்ரிதி கொடுத்த விமர்சனத்துக்கு கூட காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பதிவில் அஃப்ரிதி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டளாக்க, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தை பரப்பலாம்.

ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா என கேட்டிருந்தார். இப்போது கொரோனாவால் அஃப்ரிதி பாதிக்கப்பட்டது குறித்து சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் பேசிய காம்பீர் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடாது. எனக்கு அஃப்ரிதியுடன் அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு. ஆனால் அவர் விரைவில் நலம் பெற விரும்புகிறேன். அதேபோல என்னுடைய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரும் நலம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: