ஏழுமலையான் தரிசனம் இ-பாஸ் கிடைக்காமல் வெளிமாநில பக்தர்கள் 2-ம் நாளாக ஏமாற்றம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வெளிமாநில  பக்தர்களும் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆன்லைனில் 300 கட்டண முன்பதிவு டிக்கெட் பெற்ற வெளிமாநில பக்தர்களால், இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் இ-பாஸ் கிடைக்காததால் தரிசனம் செய்ய செல்ல முடியவில்லை. உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை  நீண்ட வரிசையில் வந்து தரிசித்தனர். இதில், ஒரே நாளில் 6,998 பேர் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக ஆன்லைன் மற்றும் இலவச டிக்கெட் பெற்ற ஆந்திர மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆன்லைன் டிக்கெட் கிடைத்தும் மாநில அரசின் இ-பாஸ் கிடைக்காததால் வெளி மாநில பக்தர்கள் நேற்றும் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வெளி மாநிலத்தவர்களும் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: