லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமித்த நிலம் எவ்வளவு?.. பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: இந்திய எல்லையில் ஊடுருவி முகாமிட்டுள்ள சீன ராணுவம் எத்தனை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்பியுமான மனிஷ் திவாரி இந்த கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்துள்ளார். காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள சரவதேச எல்லைக்கட்டுப்பாடு கொடு அருகே கடந்த ஒரு மாத காலமாக சீன துருப்புகள் முகாமிட்டுள்ளன. இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சீன ராணுவம் சுமார் 40லிருந்து 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் சீன துருப்புகளை விரட்ட இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று காங்கிரசின் மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லையில் எத்தனை பேர் குவிக்கப்பட்டுள்ளனர்?. எத்தனை பேர் திரும்ப பெறப்பட்டுள்ளனர்?. என்ற தகவலை தர சீனா மறுத்துவிட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதனிடையே ராணுவ உயர்மட்ட பேச்சு வார்த்தைக்கு இந்தியா இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: