ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் 12 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: மனித வரலாற்றில் தற்போது புதிய சகாப்தம் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த சூழலில் கொரோனா பாதித்த பள்ளிகள் மற்றும் கோயில்களில்  தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்களாக மாறின. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் பிரபல கோயில்களான திருமலை-திருப்பதி, ஸ்ரீகாலஹஸ்தி, கனிபாகம் போன்ற சில கோயில் நிர்வாகங்கள் தங்களுக்கு சொந்தமான சில கட்டடங்களை கோவிட்-19 நோயாளிகளை தங்க வைக்கும் இடங்களாக மாற்றியது.

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இங்கே தற்போது தங்க வைக்கப்பட்டனர். இந்து, இஸ்லாமியர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சில வெளிநாட்டவர்களும் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பதிப்படைந்தவர்களுக்கு இந்த கட்டடங்களில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்தது.

இதனால் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் 12 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியாக இருந்த காளகஸ்தி நேற்று முதல் பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் 12ம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலையை கண்டறியும் தேர்மல் சோதனைக்கு பிறகே அனுமதி வழங்கப்படும். கோவில் நுழைவு வாயிலில் சுரங்க கிருமிநாசினி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ராகு கேது உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: