ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெடும் : மதுராவில் கோவிலை திறக்க மறுப்பு

மதுரா: சானிடைசரில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் கோவில்களை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடபோது, 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து வழிப்பாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் முகக்கவசம் அணிய வேண்டும்,  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக்கூடாது, புனித நூல்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதவழிப்பாட்டு தலங்களுக்கு செல்வதற்கு முன் சானிடைசர் கொண்டு கைகளை கழுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் உத்தரவையடுத்து உத்தரப்பிரதேசத்தில் கோவில்கள், மசூதிகள் இன்று திறக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலையில் வழிபாடு செய்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற மதுரா கிருஷ்ணர் கோவில் இன்று திறக்கப்படவில்லை. ஏனெனில் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெடுமாம். ஆகையால் கோவிலை திறக்கவில்லை என்று பிருந்தாவன், மதுரா கோவில் நிர்வாகத்தினர். தெரிவித்துள்ளனர். இருப்பினும் மதுராவின் பிற பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஶ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: