தவறுதலாக போதை பொருள் கைதிகளை விடுவித்த சிறை ஜெயிலர் சஸ்பெண்ட்

சென்னை: தவறுதலாக கைதிகளை ஜாமீனில் விடுவித்த சிறை ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமசிவா (35),  வந்தல முரளி (38) ஆகியோர் போதை குற்றத்துக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4ம் தேதி புழல் சிறைக்கு வந்த ஒரு தகவலை சரியாக படிக்காமல் மேற்கண்ட இருவருக்கும் ஜாமீன் வந்ததாக கருதி ஜெயிலர் குணசேகரன் இருவரையும் ஜாமீனில் விடுவித்தார். இதுகுறித்து, சிறைத்துறை இயக்குனர் சுனில் குமார் சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவனக் குறைவாக இருந்த ஜெயிலர் குணசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  இதற்கிடையில் தனிப்படையினர் ஜாமீனில் சென்ற இருவரையும் மீண்டும் பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: