கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கல்பனா சாவ்லா விருது’ பெற விண்ணப்பிக்கலாம்.என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது ஒவ்வொரு ஆண்டும்  தமிழக முதல்வரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில் ₹5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த,  துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்கள் மட்டுமே தகுதியுள்ளவர்கள். 2019ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009 என்னும் முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: