திருவண்ணாமலை அருகே அடகுக்கடை அதிபர் கடத்திக்கொலை.: நகைக் கடையில் இருந்த தங்க,வெள்ளி நகைகள் மாயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வந்தவாசியில் கடத்தப்பட்ட அடகு கடை அதிபர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தவாசியை சேர்ந்த அசோக சக்கரவர்த்தி 25 கி.மீ தொலைவில் உள்ள பேசுர் என்ற இடத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வந்தார். ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கடையை திறந்த அவர், கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

Advertising
Advertising

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடத்தல் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அசோக சக்கரவர்த்தி கொலை செய்யப்பட்டு தைலம் மரம் காட்டில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கடையில் இருந்த தங்க, வெள்ளி நகைகள் கொள்ளை போனதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கடத்தப்பட்ட பிறகு அசோக சக்கரவர்த்தி அனுப்பிய நபர்களிடம் அவரது மனைவியும் நண்பரும் ரூ.3 லட்சம் பணம் அளித்ததும் தெரியவந்தது. இதனிடையே தைல மர காட்டில் புதைக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின்  சடலத்தை போலீசார் தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.  ஆனால் துறுநாற்றம் வீசியதால் அந்த பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: