ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு 2ம் கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி: முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்காக 2ம் கட்டமாக ₹10 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு மாவட்ட  வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஜெகன்மோகன் பேசியதாவது:ஆட்டோ, டாக்சி, ஓட்டி குடும்பம் நடத்தி வரும்  எனது சகோதரர்களுக்கு  உதவியாக  இருக்க விரும்பினேன். இதற்காக கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற திட்டம் மூலம் ₹10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கினேன். தொடர்ந்து 2ம் கட்டமாக இந்தாண்டும் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்கியுள்ளேன்.

கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ₹236 கோடி செலவு செய்தோம். இந்தாண்டு ₹262 கோடிக்கு மேல் வழங்கப்பட உள்ளது.தகுதி  இருந்தும் நிதி உதவி கிடைக்காவிட்டால் கவலைப்பட வேண்டாம்.   விடுபட்டவர்கள் தங்களது பகுதியில் உள்ள வார்டு மற்றும் கிராம செயலகத்திற்கு சென்று  விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி நிதி உதவி  வழங்கப்படும். இந்த தொகையை வாகன காப்பீடு மற்றும் எப்சிக்கு செலவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: