ஊரடங்கு காலத்தில் சாலை விபத்துக்களில் 198 தொழிலாளர் பலி: சொந்த ஊர் செல்லும்போது பரிதாபம்

புதுடெல்லி: கடந்த மார்ச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கடந்த மாதம் 31ம் தேதி வரை 198 புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த ஊரடங்கு அறிவிப்புகளால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். சிலர் சைக்கிகள் மூலமாகவும், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் மூலமாகவும் அடித்து பிடித்து செல்வதில் தீவிரம் காட்டினார்கள். இதுபோன்று சொந்த மாநிலத்துக்கு செல்லும் முயற்சியின் போது சாலை விபத்துக்களில் சிக்கி இதுவரை198 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 750 பேர் உயிரிழந்துள்ளனர். 1,390 பேர் காயமடைந்துள்ளனர்.  இதில் அதிகபட்சமாக உபி.யில் 94 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

Related Stories: