கொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை

சென்னை: கொரோனா சிறப்பு நிதி என 2 கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு தொடங்கி, பல லட்சம் மோசடி செய்த வடமாநில கொள்ளை கும்பலை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்த பிறகு ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. பொதுவாக மக்களிடம் வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன் என்று கூறியும், வெளிநாட்டில்  வேலை வாங்கி தருவதாக கூறி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்று மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகின்றனர். மேலும், சிலர் வங்கியில் கடன் பெற்று தருவதாக போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தாலும், முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.  

இதுகுறித்து காவல் துறை சார்பில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களிடம் அவ்வபோது அறிவுகளை மற்றும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால் தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிலேயே ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் டிஜிபி மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள கூடுதல் டிஜிபி என 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு போல் மோசடி கும்பல், அவர்கள் பெயர் மற்றும் புகைப்படங்களுடன் கணக்கு தொடங்கி அவர்களின் நண்பர்களிடம் ‘கொரோனா நிவாரண நிதி’ க்கு எனது பங்கு பணம் செலுத்தியுள்ளதாகவும், நண்பர்களும் கொரோனா நிதி வழங்கினால் சந்ேதாஷமாக இருக்கு  என்று வங்கி கணக்கு எண்களுடன் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவு பார்த்த இரண்டு உயர் அதிகாரிகளின் நண்பர்கள் ஐபிஎஸ் அதிகாரியே கூறுகிறார் என்று நினைத்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணில் தங்களது பங்கு கொரோனா நிவாரணமாக பணத்தை செலுத்தி விட்டு  போன் செய்து அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை கேட்ட இரண்டு கூடுதல் டிஜிபிக்களும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். நாங்கள் யாரையும் கொரோனா நிதி கேட்கவில்லை என்று கூறி எனது பெயரில் உள்ள போலி கணக்கு என்றும் கூறியுள்ளனர். பிறகு இரண்டு கூடுதல் டிஜிபிகளும் தங்களது ேபஸ்புக் கணக்கில் தங்களது பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரையும் கொரோனா நிதி வழங்கும் படி கேட்கவில்லை என்றும் பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 அதன்படி சைபர் க்ரைம் போலீசார் இரண்டு கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலியாக கணக்குகளில் பதிவு செய்த வங்கி கணக்கு எண்களை ஆய்வு செய்த போது அது ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள வங்கி கணக்கு என்றும், அந்த மோசடி கும்பல், பிரபலங்கள் பெயர், ராணுவ அதிகாரிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய்க்கு மோசடி ெசய்து இருப்பது தெரியவந்தது. மேலும், இரண்டு அதிகாரிகள் பெயரில் பல லட்சம் மோசடி செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தலைமறைவாக உள்ள  ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர். தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் பல லட்சம் ேமாசடி செய்யப்பட்ட சம்பவம்  போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: