வேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது

வேலூர்: வேலூரில் ஒருதலைக்காதலால் பெண் போலீசுக்கு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து லவ் டார்ச்சர் செய்த 42 வயது போலீஸ்காரரை போலீசார் நேற்று கைது செய்தனர். இ்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் கஸ்பாவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (42), தலைமை காவலர். வேலூர் ஆயுதப்படை பிரிவு டிரைவர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பிரிவு டிரைவரான 22 வயது பெண் போலீசிடம் சென்று காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அவர் மறுக்கவே தொடர்ந்து ஒருதலையாக காதலித்து வந்த அவர் பெண் போலீசுக்கு அடிக்கடி லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் பொறுக்கமுடியாத பெண் போலீஸ் இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் புகார் ெசய்துள்ளார். இதையடுத்து தலைமை காவலர் பால்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் பெண் போலீசிடம் சென்று திருமணம் செய்து கொள்வதாக மீண்டும் லவ் டார்ச்சர்  செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் போலீசுக்கு பிறந்த நாளையொட்டி செல்போன், புடவை உள்ளிட்ட கிப்டுகளை வாங்கி கொடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீஸ், வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து தலைமைகாவலர் பால்ராஜை நேற்று கைது செய்தனர். 22 வயது பெண் போலீசுக்கு 42 வயது தலைமை காவலர் லவ் டார்ச்சர் கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: