செய்துங்கநல்லூரில் கோமாதாவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி

ஸ்ரீவைகுண்டம்: செய்துங்கநல்லூரில் விவசாயி ஒருவர், தான் வளர்க்கும் பசுவுக்கு வளைகாப்பு விழா நடத்தி பாசத்தை வெளிப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம், செங்துங்கநல்லூர் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(58). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வளர்த்த பசு ஒன்று கன்று ஈன்றது. பசுவின் பால் முழுவதும் கன்றுக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் எனக் கருதிய பால்ராஜ் குடும்பத்தினர், பாலை கறக்காமல் முழுவதையும் கன்றுக்குட்டியை குடிக்க வைத்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு மாதத்திற்குள் பசு திடீரென இறந்தது. இதனால் தாயை இழந்த கன்றுக்குட்டியை பால்ராஜ் குடும்பத்தினர் தங்கள் பிள்ளை போல் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

நன்றாக வளர்ந்த கன்றுக்குட்டி, தற்போது சினையானது. இதனால் மகிழ்ச்சியடைந்த பால்ராஜ் குடும்பத்தினர், பசுவுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். இதற்காக, பசுவை அலங்கரித்து கழுத்திலும் கால்களிலும் வளையல்களை மாட்டிவிட்டும் கழுத்தில் மலர் மாலையுடன் முருக்கு மாலையிட்டு புதுத்துணியை சுற்றியும் சிறப்பு பூஜை செய்தனர்.பசுவிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட கொடுத்து குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியது காண்பவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: