குட்கா கடத்தல் வாலிபர் கைது

ஆவடி: திருநின்றவூர் - பெரியபாளையம் சாலை, பாக்கம் சோதனைச்சாவடியில் நேற்று மதியம் திருநின்றவூர் எஸ்ஐ மனோகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அதனை  மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில், 2 மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காரில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது,  பெரியபாளையம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஜானகிராமன் (32). தாம்பரத்தில் டீக்கடை நடத்துகிறார். டீ கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி யது தெரிந்தது. தொடர்ந்து போலீசார்,  அவரை கைது செய்தனர்.

Related Stories: