குட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், சிறப்பு காவலர் பாபு உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை  மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில், குட்கா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், எளாவூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். 

Related Stories: