கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ரத்து அமராவதி ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

கரூர்: மாரியம்மன் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் அமராவதி ஆற்றில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது, வீடுகளில் பக்தர்கள் தயிர்சாதம் படையல், இளநீர், மாவிளக்கு வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி கம்பம் விடும் 2 நாட்களுக்கு முன்னதாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதால் அமராவதி ஆற்றங்கரைக்கு பலர் வந்தனர். அவர்கள் மொட்டை அடித்து சந்தனம் பூசி வீட்டில் சென்று சாமி கும்பிட்டனர். முக்கிய திருவிழாவான கம்பம் ஆற்றுக்கும் அனுப்பும் விழா நாளை(27ம் தேதி) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்த விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: