பெண்ணிடம் வழிப்பறி

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை மார்டன் டீச்சர்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் யுவராணி அனுசியா (26). இவர், சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் பெரம்பூர் பகுதியில் கொரோனா கணக்கெடுப்பு பணியில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் மாதவரம் நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே வந்தபோது 2 பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து தோளில் இருந்த கைப்பையை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பினர். அந்தப் பையில் ₹16,000 ரொக்கம் மற்றும் செல்போன் இருந்தது. கீழே விழுந்து லேசான காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடுகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: