கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஐ.ஆர்.டி. சாலையில் கஞ்சா விற்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.