சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாததால் மீண்டும் உருவம் மாறும் கொரோனா பெட்டிகள்: சிறப்பு ரயில்களாக இயக்க முடிவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் 3120 பெட்டிகளை சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ெசல்வதற்காக கடந்த மே 1ம் ேததி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் 2,000 ஷராமிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டன. இதற்காக அந்த பெட்டியின் நடு பெர்த் அகற்றப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

அவ்வாறு மாற்றப்பட்ட தனிமை வார்டு பெட்டிகளில் இதுவரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாதவற்றை சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில், `கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் 60 சதவீதத்தை ஷராமிக் சிறப்பு ரயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 3120 பெட்டிகளை சிறப்பு ரயில்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்,’ என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏசி அல்லாத இந்த பெட்டிகளை மீண்டும் வழக்கமான ரயில் பெட்டிகளாக மாற்ற முடியாது. தனிமை வார்டுளாக மாற்றப்பட்ட ஆக்சிஜன் டேங்க், வென்டிலேட்டர், பிற மருத்துவ கருவிகள் இந்த பெட்டியில் இருந்து அகற்றப்பட்டு சிறப்பு ரயில்களாக பயன்படுத்தப்படும். மேலும், நடு பெர்த் இல்லாததால் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே இந்த ரயிலில் பயணிக்க முடியும்,’’ என்றனர்.

Related Stories: