தொழிலாளர்கள் வசதிக்காக கூடுதல் இடங்களில் ரயில்களை நிறுத்தலாம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதல் இடங்களில் நிறுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு  மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக  நிலையான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டி ெநறிமுறை குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று கூறியதாவது:

* புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல சிறப்பு ரயில்களுக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகே ரயில்வே அமைச்சகம் வழங்க வேண்டும்.

* மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ரயில்கள் கால அட்டவணை, ரயில் நிறுத்தம் மற்றும் சென்றடையும் இடத்தை ரயில்வே முடிவு செய்ய வேண்டும்.

* சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக கூடுதல் இடங்களில் ரயில்களை நிறுத்தலாம்.

*  பயணத்துக்கு முன்பாக பயணிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதை மாநில அரசுகளும், ரயில்வேயும் உறுதி செய்ய வேண்டும்.

* ரயில் பயணத்தின்போது அனைத்து பயணிகளும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கு, தேவையான எண்ணிக்கையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.

1,565 சிறப்பு ரயில்கள் 20 லட்சம் பயணிகள்

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரயில்வே துறை கடந்த 1ம் தேதி முதல் இயக்கிய 1,565 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 20 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசம் 837, பீகார் 428, மத்திய பிரதேசம் 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை  பதிவு செய்துள்ளன. இதுவரை குஜராத்தில் இருந்து 496, மகாராஷ்டிராவில் இருந்து 266, பஞ்சாபில் இருந்து 89, தமிழ்நாட்டில் இருந்து 61 ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன. ஒரு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே ரூ. 80 லட்சம் வரை செலவிடுகிறது,’’ என்றார்.

Related Stories: