அம்பன் புயல் உதவி மம்தா, பட்நாயக்குடன் அமித்ஷா போனில் பேச்சு

புதுடெல்லி: ஆம்பன் புயலால் ஏற்படும் சூழலை எதிர்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மேற்கு வங்கம், ஒடிசா முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.  வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள அம்பன் புயலானது, இன்று பிற்பகல் அல்லது மாலை மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு  தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் அவர் தொலைபேசி மூலமாக பேசினார்.

Related Stories: