டெல்லி: வங்காள விரிகுடாவில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் புயலாக அம்பன் புயல் உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போது கடலில் புயலின் காற்றின் வேகம் 200-240 கி.மீ. உள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 110-120 கிமீ வேகமும், அதிகபட்சமாக 135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.